அமிலப் பின்னோட்டத்திற்கான சிறந்த மருந்துகள்: வகைகள், செயல்படும் விதம் மற்றும் சரியான மருந்தைத் தேர்ந்தெடுப்பது
வயிற்றில் உள்ள அமிலமும் உணவும் உணவுக்குழாய் வழியாக மீண்டும் மேலே வருவதால் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இதைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மருந்துகள் அமிலம் மீண்டும் மேலே வரும் தொந்தரவைக் குறைக்க உதவுகின்றன. சிலருக்கு இது எப்போதாவது ஏற்படலாம்; மற்றவர்களுக்கு சில உணவுகள் அல்லது பழக்கவழக்கங்களால் அடிக்கடி ஏற்படலாம். இதனால் நெஞ்செரிச்சல், புளிப்பு அல்லது கசப்பான ஏப்பம் போன்ற அசௌகரியங்கள் உண்டாகலாம்.
இந்தத் தொந்தரவுக்கான மருந்துகள் அவற்றின் சேர்மங்கள் மற்றும் வலிமையைப் பொறுத்து மருத்துவரின் பரிந்துரையுடனும் சில நேரங்களில் பரிந்துரையின்றியும் கிடைக்கின்றன.
உங்களுக்கு ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுக்க, அறிகுறிகளின் வகை, அவற்றின் தீவிரம், அமிலம் மேலே வரும் அடிக்கடி நிகழும் தன்மை மற்றும் உங்கள் ஒட்டுமொத்த உடல்நிலை ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்.
நீண்டகாலமாக ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஓமிபிரசோல் மற்றும் பான்டோபிரசோல் போன்ற மருந்துகள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில், அமிலம் மீண்டும் மேலே வருவதால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க உதவும் முக்கியமான மருந்துகளைப் பற்றிப் பார்க்கலாம்.
அமிலம் உணவுக்குழாய் வழியாக மீண்டும் மேலே வருவது என்றால் என்ன?
வயிற்றில் உள்ள உணவும் அமிலமும் மீண்டும் உணவுக்குழாய் வழியாக மேல்நோக்கி வருவதே அமிலப் பின்னோட்டம் எனப்படுகிறது. வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் இருக்கும் தசை வளையம் பலவீனமாக இருப்பதாலோ, அது சரியாகச் சுருங்கி விரியாததாலோ இவ்வாறு நிகழலாம்.
சிலர் இந்தத் தொந்தரவை நீண்டகாலமாக நீடிக்கும் தீவிரமான நிலையான ஜி.இ.ஆர்.டி. எனப்படும் பாதிப்புடன் ஒன்றாகக் கருதுகின்றனர். ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல. ஜி.இ.ஆர்.டி. என்பது அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தின் தீவிரமான வடிவமாகும். இதனால் உடலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். எப்போதாவது ஏற்படும் அமிலப் பின்னோட்டம் பொதுவாகக் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது.
அமிலப் பின்னோட்டத்தின் பொதுவான அறிகுறிகள்
அமிலப் பின்னோட்டத்தின் அறிகுறிகள் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது ஏற்படும் அறிகுறிகளைப் போல இருக்கலாம். இருப்பினும், இந்த இரண்டு நிலைகளும் ஒன்றல்ல. வயிற்றில் உள்ள உணவும் அமிலமும் உணவுக்குழாய் வழியாக மீண்டும் மேலே வரும்போது, வயிறு உப்புசம் அல்லது ஏப்பம் ஏற்படலாம். மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- நெஞ்சில் எரிச்சல் ஏற்படுதல்
- புளிப்பு அல்லது கசப்பான திரவம் மீண்டும் வாய்க்கு வருதல்
- நீண்டகாலமாகத் தொடர்ந்து இருமல் ஏற்படுதல்
- வாயில் துர்நாற்றம் வீசுதல்
அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் வகைகள்
பெரியவர்களுக்கு அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகை மருந்தும் வெவ்வேறு முறையில் செயல்பட்டு அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. எப்போதாவது ஏற்படும் தொந்தரவுக்கான நிவாரணம் தேவையா அல்லது அடிக்கடி ஏற்படும் அறிகுறிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை தேவையா என்பதைப் பொறுத்து சரியான மருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
- அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகள்: வயிற்றில் உள்ள அமிலத்தின் தாக்கத்தைக் குறைத்து, எப்போதாவது ஏற்படும் அமிலப் பின்னோட்டத்திலிருந்து விரைவான நிவாரணம் அளிக்க உதவுகின்றன. இவை மெல்லக்கூடிய மாத்திரைகள், திரவ மருந்துகள் உள்ளிட்ட பல வடிவங்களில் கிடைக்கின்றன.
- அமில உற்பத்தியைக் குறைக்கும் மருந்துகள்: வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்க உதவுகின்றன. அமிலப் பின்னோட்டம் அடிக்கடி ஏற்படும்போது இவ்வகை மருந்துகள் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
- எச்2 ஏற்பிகளைத் தடுக்கும் மருந்துகள்: இம்மருந்துகள் உடலில் உள்ள ஹிஸ்டமின் எச்2 ஏற்பிகளின் செயல்பாட்டைத் தடுத்து, வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்க உதவுகின்றன.
- ஆல்ஜினேட் மருந்துகள்: வயிற்றில் உள்ள உணவின் மேற்பரப்பில் மிதக்கும் பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி, அமிலம் உணவுக்குழாய் வழியாக மீண்டும் மேலே வருவதைக் குறைக்க உதவுகின்றன. சில மருந்துகளில் இவை அமிலத்தை நடுநிலையாக்கும் சேர்மங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உணவுக்குப் பிறகு ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் உணவு அல்லது திரவம் மீண்டும் வாய்க்கு வரும் தொந்தரவைக் குறைக்க இவை உதவலாம்.
- செரிமான இயக்கத்தை மேம்படுத்தும் மருந்துகள்: குறிப்பிட்ட சில நிலைகளில் வயிற்றில் உள்ள உணவு விரைவாகச் சிறுகுடலுக்குச் செல்ல உதவுகின்றன. அமிலப் பின்னோட்டத்திற்கான முதல் தேர்வு சிகிச்சையாக இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பிட்ட மருத்துவக் காரணம் இருந்தால் மட்டுமே மருத்துவரின் பரிந்துரையின்படி பயன்படுத்த வேண்டும்.
அமிலப் பின்னோட்டத்திற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியல்
வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைப்பதன் மூலமாகவோ, ஏற்கெனவே உள்ள அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலமாகவோ அமிலப் பின்னோட்டம் மற்றும் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தப் பல மருந்துகள் உதவுகின்றன. வயிற்றில் உள்ள அமிலம் மீண்டும் மேலே வருவதால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
|
மருந்தின் பெயர் |
எவ்வாறு உதவுகிறது? |
|
அலுமினியம் அல்லது மெக்னீசியம் ஹைட்ராக்சைடு |
அமிலத்தை நடுநிலையாக்கி, வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது. |
|
பான்டோபிரசோல் |
வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைத்து, அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. |
|
ஓமிபிரசோல் |
அதிகப்படியான அமில உற்பத்தியைக் குறைத்து, அமிலப் பின்னோட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. |
|
எசோமிபிரசோல் |
அமில உற்பத்தியைக் குறைத்து, அமிலப் பின்னோட்டத்தால் உணவுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் குணமடைய உதவலாம். |
|
ஃபாமோட்டிடின் |
அமில உற்பத்தியைக் குறைத்து, நெஞ்செரிச்சலைத் தணிக்க உதவலாம். |
|
சோடியம் ஆல்ஜினேட் |
பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி, உணவுக்குப் பிறகு அமிலம் மீண்டும் மேலே வருவதைக் குறைக்க உதவுகிறது. |
இந்தியாவில் அமிலப் பின்னோட்டத்திற்கான சிறந்த மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் திரவ மருந்துகள்
உணவு சாப்பிட்ட பிறகு அமிலம் மீண்டும் மேலே வருவதால் அதிக அசௌகரியம் ஏற்படலாம். இந்தத் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்தச் சரியான மாத்திரைகள் அல்லது திரவ மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். ஜீலேப் மருந்தகம், மருத்துவரின் பரிந்துரையுடன் கிடைக்கும் மருந்துகளையும் பரிந்துரையின்றிக் கிடைக்கும் சில மருந்துகளையும் வழங்குகிறது.
பான்டோரைடு 20 மாத்திரை
பான்டோரைடு 20 மாத்திரையில் பான்டோபிரசோல் உள்ளது. இது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்கும் மருந்து வகையைச் சேர்ந்தது. அமிலம் மீண்டும் மேலே வருதல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சேர்மம்: பான்டோபிரசோல் 20 மி.கி.
- பயன்கள்: அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டம், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அதிக அமிலம் இருப்பதால் ஏற்படும் பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஓமரைடு 20 காப்ஸ்யூல்
ஓமரைடு 20 என்பது அமிலப் பின்னோட்டம் மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் அதனுடன் தொடர்புடைய செரிமானப் பாதிப்புகளின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் காப்ஸ்யூல் ஆகும். இதில் 20 மி.கி. ஓமிபிரசோல் உள்ளது. இது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைத்து செரிமானம் தொடர்பான தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சேர்மம்: ஓமிபிரசோல் 20 மி.கி.
- பயன்கள்: அமிலப் பின்னோட்டம், நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்துடன் தொடர்புடைய செரிமானப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எஸ்சோன் 40 மாத்திரை
எஸ்சோன் 40 மாத்திரையில் எசோமிபிரசோல் உள்ளது. இது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்கும் மருந்து வகையைச் சேர்ந்தது. அமிலப் பின்னோட்டம் மற்றும் அமிலத்துடன் தொடர்புடைய பிற தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சேர்மம்: எசோமிபிரசோல் 40 மி.கி.
- பயன்கள்: அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அலும்சிட் அமிலநீக்கி மற்றும் வாயுத்தொல்லை நீக்கும் மாத்திரை
அலும்சிட் மாத்திரையில் வயிற்று அமிலத்தை நடுநிலையாக்க உதவும் சேர்மங்களுடன் சிமெத்திகோனும் உள்ளது. இது வயிற்றில் உள்ள அமிலத்தின் தாக்கத்தைக் குறைத்து, வாயு தொடர்பான செரிமான அசௌகரியங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சேர்மங்கள்: உலர்ந்த அலுமினியம் ஹைட்ராக்சைடு 300 மி.கி. + அலுமினியம் மெக்னீசியம் சிலிக்கேட் 250 மி.கி. + சிமெத்திகோன் 25 மி.கி.
- பயன்கள்: எப்போதாவது ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலத்தன்மை, செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
ஃபாம்சீ 40 மாத்திரை
ஃபாம்சீ 40 மாத்திரையில் ஃபாமோட்டிடின் உள்ளது. இது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்கும் மருந்து வகையைச் சேர்ந்தது. அமிலத்துடன் தொடர்புடைய செரிமானப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
- சேர்மம்: ஃபாமோட்டிடின் 40 மி.கி.
- பயன்கள்: நெஞ்செரிச்சல், அமிலப் பின்னோட்டம் மற்றும் வயிற்றில் அதிக அமிலம் இருப்பதால் ஏற்படும் பிற அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அலும்சிட் எம்.பி.எஸ். அன்னாசிப்பழச் சுவை திரவ மருந்து
அலும்சிட் எம்.பி.எஸ். என்பது அன்னாசிப்பழச் சுவையுடன் கிடைக்கும் திரவ அமிலநீக்கி மருந்தாகும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள சிமெத்திகோன் வயிற்றில் சேரும் வாயுவால் ஏற்படும் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சேர்மங்கள்: அலுமினியம் ஹைட்ராக்சைடு 215 மி.கி. + மெக்னீசியம் ஹைட்ராக்சைடு 80 மி.கி. + சிமெத்திகோன் 25 மி.கி.
- பயன்கள்: எப்போதாவது ஏற்படும் வயிற்று அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு மற்றும் வாயுவால் ஏற்படும் வயிறு உப்புசம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
மருத்துவர் பரிந்துரையின்றிக் கிடைக்கும் மருந்துகளுக்கும் பரிந்துரையுடன் கிடைக்கும் மருந்துகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
மருத்துவர் பரிந்துரையின்றிக் கிடைக்கும் மருந்துகளும், மருத்துவரின் பரிந்துரையுடன் கிடைக்கும் மருந்துகளும் அமிலப் பின்னோட்டத்தையும் அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்த உதவலாம். எந்த வகை மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது இந்தத் தொந்தரவு எவ்வளவு அடிக்கடி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தது.
|
அம்சம் |
பரிந்துரையின்றிக் கிடைக்கும் மருந்துகள் |
மருத்துவர் பரிந்துரையுடன் கிடைக்கும் மருந்துகள் |
|
பொதுவான எடுத்துக்காட்டுகள் |
அமிலநீக்கி மருந்துகள், ஆல்ஜினேட் மருந்துகள் |
பான்டோபிரசோல், ஓமிபிரசோல் (மருத்துவர் பரிந்துரைக்கும்போது) |
|
முக்கியப் பயன்பாடு |
எப்போதாவது ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தணித்தல் |
அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துதல் |
|
செயல்படும் விதம் |
அமிலத்தை நடுநிலையாக்குதல் அல்லது அது மீண்டும் மேலே வருவதைத் தடுத்தல் |
வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைத்தல். |
|
எப்போது பயன்படுத்த வேண்டும்? |
எப்போதாவது ஏற்படும் அறிகுறிகளுக்கு, அறிவுறுத்தலின்படி பயன்படுத்தலாம் |
மருத்துவர் பரிந்துரைக்கும்போது பயன்படுத்த வேண்டும் |
|
முன்னெச்சரிக்கைகள் |
அளவுக்கு அதிகமாகவோ நீண்டகாலமாகவோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். |
மருத்துவர் குறிப்பிட்ட அளவையும் கால அளவையும் பின்பற்றவும். |
மருந்துகளுடன் வாழ்க்கைமுறையிலும் செய்ய வேண்டிய மாற்றங்கள்
மருந்துகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவினாலும், அன்றாடப் பழக்கவழக்கங்களில் செய்யும் மாற்றங்களும் நல்ல பலனை அளிக்கலாம். அமிலத்தன்மையைக் குறைக்க உதவும் வீட்டு வைத்திய முறைகளும் அமிலப் பின்னோட்டம் அல்லது ஜி.இ.ஆர்.டி. பாதிப்பின் அறிகுறிகளைத் தணிக்க உதவலாம்.
- குறிப்பாக இரவு உணவைச் சிறிய அளவில் சாப்பிடுங்கள்.
- உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 2 மணி நேரம் படுக்கவோ உறங்கவோ வேண்டாம்.
- உங்கள் அறிகுறிகளை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் பானங்களைக் கண்டறிந்து அவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, காரமான உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் மற்றும் காற்றடைக்கப்பட்ட பானங்கள் இத்தகைய தொந்தரவுகளை அதிகரிக்கலாம்.
- இரவில் தலையைச் சற்று உயர்த்திப் படுப்பதும் அமிலம் மீண்டும் மேலே வருவதைக் குறைக்க உதவும்.
- உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது அறிகுறிகளைக் குறைக்க உதவலாம்.
- புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில், வயிற்றிலிருந்து அமிலம் மீண்டும் மேலே வருவதைத் தடுக்கும் இயல்பான செயல்பாட்டைப் புகைப்பிடித்தல் பாதிக்கலாம்.
அமிலத்தன்மைக்கான ஆயுர்வேத மருந்துகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
அமிலப் பின்னோட்டத்திற்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
எப்போதாவது மட்டும் அமிலப் பின்னோட்டம் ஏற்பட்டால், பரிந்துரையின்றிக் கிடைக்கும் மருந்துகளையும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் கொண்டு அதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்:
- அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சலால் தூக்கம் பாதிக்கப்படுதல்.
- சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தல் அல்லது மீண்டும் மீண்டும் ஏற்படுதல்.
- உணவை விழுங்குவதில் சிரமம் அல்லது விழுங்கும்போது வலி ஏற்படுதல்.
- தொடர்ந்து வாந்தி எடுத்தல் அல்லது காரணமின்றி உடல் எடை குறைதல்.
- வாந்தியில் இரத்தம் வருதல் அல்லது கருமையான, தார் போன்ற மலம் வெளியேறுதல்.
முடிவுரை
அமிலப் பின்னோட்டத்திற்கான சரியான மருந்து, அறிகுறிகள் எவ்வளவு அடிக்கடி ஏற்படுகின்றன மற்றும் அவற்றின் தீவிரம் என்ன என்பதைப் பொறுத்தது. எப்போதாவது ஏற்படும் தொந்தரவுகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றிக் கிடைக்கும் சில மருந்துகள் உதவலாம். ஆனால் இந்தப் பிரச்சினை அடிக்கடி ஏற்படுபவர்கள், சரியான காரணத்தைக் கண்டறிந்து ஜி.இ.ஆர்.டி. அல்லது அமிலப் பின்னோட்டத்திற்கான பொருத்தமான சிகிச்சையைப் பெற மருத்துவரை அணுக வேண்டும்.
சிகிச்சையுடன் சேர்த்து, சிறிய அளவில் உணவு சாப்பிடுதல், இரவு நேரத்தில் தாமதமாக உண்பதைத் தவிர்த்தல் மற்றும் தொந்தரவைத் தூண்டும் உணவுகளைக் கண்டறிதல் போன்ற பழக்கங்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவலாம். அமிலப் பின்னோட்டம் தொடர்ந்து நீடித்தாலோ எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றினாலோ, சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவ நிபுணரை அணுகுங்கள்.
Table of Contents
Frequently Asked Questions (FAQs)
Ans.குறிப்பாக உணவு சாப்பிட்ட பிறகு அல்லது படுத்திருக்கும்போது நெஞ்செரிச்சல், வாயில் புளிப்புச் சுவை மற்றும் வயிற்றில் உள்ள உணவு அல்லது அமிலம் தொண்டை நோக்கி மீண்டும் வருதல் போன்ற அறிகுறிகள் அமிலப் பின்னோட்டத்தால் ஏற்படலாம்.
Ans.ஓமிபிரசோல் மற்றும் பான்டோபிரசோல் ஆகியவை வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதைக் குறைக்கும் மருந்துகள். அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த இவை மருத்துவரின் ஆலோசனையின்படி பயன்படுத்தப்படுகின்றன.
Ans.அமிலநீக்கி மருந்துகள் வயிற்றில் ஏற்கெனவே உள்ள அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. ஆல்ஜினேட் மருந்துகள் பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி அமிலம் மீண்டும் மேலே வருவதைக் குறைக்க உதவுகின்றன. இவ்விரண்டும் எப்போதாவது ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு விரைவாக நிவாரணம் அளிக்கலாம்.
Ans.எப்போதாவது ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு விரைவான நிவாரணம் அளிக்க அமிலநீக்கி மருந்துகள் உதவுகின்றன. அடிக்கடி ஏற்படும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த அமில உற்பத்தியைக் குறைக்கும் பி.பி.ஐ. மருந்துகள் பொதுவாக அதிகப் பயனளிக்கின்றன.
Ans.அமிலநீக்கி மருந்துகள் சில நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கலாம். ஆனால் பான்டோபிரசோல் மற்றும் ஓமிபிரசோல் போன்ற மருந்துகள் முழுமையான பலனை அளிக்கச் சில நாட்கள் ஆகலாம்.
Ans.பான்டோபிரசோல் மற்றும் ஓமிபிரசோல் ஆகிய இரண்டும் அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகளாகும். இவற்றில் ஒன்று அனைவருக்கும் சிறந்தது என்று கூற முடியாது. உங்கள் அறிகுறிகள், நீங்கள் எடுத்துக்கொள்ளும் பிற மருந்துகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றைப் பொறுத்து சரியான மருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
Ans.இரவில் அடிக்கடி அமிலப் பின்னோட்டம் ஏற்படுபவர்களுக்கு பி.பி.ஐ. மருந்துகள் உதவலாம். உணவுக்குப் பிறகு ஏற்படும் தொந்தரவுகளைக் குறைக்க ஆல்ஜினேட் மருந்துகளும் உதவலாம். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் இரவு நேர அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவ நிபுணரை அணுகவும்.
Ans.பான்டோபிரசோல் மற்றும் ஓமிபிரசோல் போன்ற மருந்துகள் பொதுவாக உணவு சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளும்போது சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பிட்ட மருந்தின் பயன்பாட்டு வழிமுறைகளையும் மருத்துவரின் ஆலோசனையையும் பின்பற்றவும்.
Ans.சிலருக்கு அமிலப் பின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தத் தினமும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். இருப்பினும், நீண்டகாலமாக மருந்துகளைப் பயன்படுத்துவது மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். நோய்க்கான காரணம் மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து மருந்தின் அளவும் பயன்பாட்டுக் காலமும் தீர்மானிக்கப்படும்.
Ans.ஆம். இந்த மருந்துகளால் தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். பக்கவிளைவுகளின் தன்மை மருந்தைப் பொறுத்து மாறுபடும். நீண்டகாலப் பயன்பாட்டிற்கு மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படலாம்.
Ans.தண்ணீர் குடிப்பது உணவுக்குழாயில் எஞ்சியிருக்கும் அமிலத்தைக் கழுவ உதவலாம். சிட்ரஸ் பழங்கள் சேர்க்கப்படாத, வாயுவூட்டப்படாத பானங்கள் சிலருக்கு ஏற்றதாக இருக்கலாம். காபி, வாயுவூட்டப்பட்ட பானங்கள் மற்றும் அமிலத்தன்மை அதிகமுள்ள பழச்சாறுகள் சிலருக்கு அறிகுறிகளைத் தூண்டலாம்.
Recent Blogs
References
- https://www.webmd.com/heartburn-gerd/what-is-acid-reflux-disease
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK554462/
- https://www.niddk.nih.gov/health-information/digestive-diseases/acid-reflux-ger-gerd-adults
- https://medlineplus.gov/ency/article/000265.htm
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK279252/
- https://www.ncbi.nlm.nih.gov/books/NBK598550/
Disclaimer : Zeelab Pharmacy provides health information for knowledge only. Do not self-medicate. Always consult a qualified doctor before starting, stopping, or changing any medicine or treatment.
Related Products
Need Medicines Quick?
Share location to check quick delivery serviceability.
Change Location
Location Access Needed
Your location appears to be blocked or disabled.
Please enable the location from your browser or
device settings.
₹ 0
0
Items added
Quick Links
Categories
Our Policies
2026 Copyright By © Zeelab Pharmacy Private Limited. All Rights Reserved
Our Payment Partners
Added!
|
|





