இந்தியாவில் வயிற்றுப்போக்கிற்கான சிறந்த மருந்துகளின் பட்டியல்: முழுமையான வழிகாட்டி
வயிற்றுப்போக்கு என்பது செரிமான மண்டலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்நிலையில் மலம் நீர்த்த நிலையில் வெளியேறும். சில உணவுகள் ஒத்துக்கொள்ளாமை, மாசடைந்த உணவு அல்லது தண்ணீர், மன அழுத்தம், சுகாதாரமின்மை மற்றும் தொற்றுகள் போன்ற காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து குறைதல், உடல் பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த லோபெரமைடு, ரேஸ்காடோட்ரில் மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. தொற்று, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையின்மை அல்லது குடல் எரிச்சல் போன்ற அடிப்படைக் காரணங்களைப் பொறுத்து இம்மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
வயிற்றுப்போக்கிற்கான சரியான மருந்து, அது ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.
இந்தக் கட்டுரையில் பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த மருந்துகளின் பட்டியல், பொதுவாகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் பிற சிகிச்சை முறைகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். லேசான வயிற்றுப்போக்கு முதல் தொற்றால் ஏற்படும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி வரையிலான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும் சிகிச்சை முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
வயிற்றுப்போக்கு என்பது வழக்கத்தைவிட அடிக்கடி நீர்த்த அல்லது தளர்வான மலம் வெளியேறும் செரிமானப் பிரச்சினையாகும். தொற்றுகள், மாசடைந்த உணவு அல்லது தண்ணீர், சில உணவுகள் ஒத்துக்கொள்ளாமை, குறிப்பிட்ட மருந்துகள் அல்லது பிற செரிமானக் கோளாறுகள் காரணமாக இது ஏற்படலாம்.
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் சில:
- மாசடைந்த உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுதல்
- பாக்டீரியா அல்லது நச்சுயிரிகளால் ஏற்படும் தொற்றுகள்
- சுற்றுப்புறத் தூய்மை மற்றும் தனிநபர் சுகாதாரத்தைப் பேணாமை
- சில உணவுகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமை அல்லது உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுதல்
- வயிறு அல்லது குடலில் ஏற்படும் தொற்றுகள்
- மன அழுத்தம் மற்றும் செரிமான மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்
- சில மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்
வயிற்றுப்போக்கு பெரும்பாலும் தற்காலிகமானது. சில நாட்களுக்குள் இது குறையக்கூடும். இருப்பினும், அடிக்கடி அல்லது கடுமையாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறைதல், உடல் பலவீனம் மற்றும் நீர், தாது உப்புகள் இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உடலில் போதுமான நீர்ச்சத்தைப் பேணுதல் மற்றும் தகுந்த பராமரிப்பு ஆகியவை அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உடல்நலம் மீளவும் உதவும்.
வயிற்றுப்போக்கின் அறிகுறிகள்
வழக்கத்தைவிட அடிக்கடி, குறிப்பாக ஒரு நாளில் மூன்று முறை அல்லது அதற்கு மேல் நீர்த்த அல்லது தளர்வான மலம் வெளியேறுவது வயிற்றுப்போக்கின் முக்கிய அறிகுறியாகும். இதனுடன் பின்வரும் அறிகுறிகளும் ஏற்படலாம்:
- தளர்வான, நீர்த்த அல்லது திரவ நிலையில் மலம் வெளியேறுதல்
- வயிற்று வலி அல்லது அடிவயிற்றில் வலி ஏற்படுதல்
- அடிக்கடி மற்றும் திடீரென மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
- குமட்டல் அல்லது வாந்தி
- காய்ச்சல்
- வயிறு உப்புசம்
வயிற்றுப்போக்கிற்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் வகைகள்
வயிற்றுப்போக்கிற்கான மாத்திரைகள், அவை செயல்படும் முறையைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. குடலின் இயக்கத்தைக் குறைத்தல், உடலில் இருந்து வெளியேறும் திரவத்தின் அளவைக் குறைத்தல், குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் சமநிலையை மீட்டெடுத்தல் அல்லது நீர்ச்சத்துக் குறைபாட்டைத் தடுத்தல் போன்ற வழிகளில் இம்மருந்துகள் செயல்பட்டு, பாதுகாப்பான மற்றும் சிறந்த சிகிச்சைக்கு உதவுகின்றன.
- உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசல்: வயிற்றுப்போக்கால் உடலில் இழக்கப்படும் நீர் மற்றும் தாது உப்புகளை ஈடுசெய்து, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.
- குடல் இயக்கத்தைக் குறைக்கும் மருந்துகள்: குடலின் இயக்கத்தைக் குறைத்து, தகுந்த நோயாளிகளுக்கு மலம் கழிக்கும் முறைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவலாம்.
- குடலில் திரவச் சுரப்பைக் குறைக்கும் மருந்துகள்: குடலுக்குள் சுரக்கும் திரவத்தின் அளவைக் குறைத்து, நீர்த்த மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவலாம்.
- நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்துகள்: சாக்கரோமைசஸ் பவுலார்டி மற்றும் லாக்டோபாசில்லஸ் ராம்னோசஸ் போன்ற நுண்ணுயிரிகள் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேண உதவலாம். சிலருக்கு திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தவும் இவை பயனளிக்கலாம்.
- நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட அனைவருக்கும் இம்மருந்துகள் வழக்கமாகத் தேவைப்படுவதில்லை. பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, அவற்றுக்கான சிகிச்சை பொருத்தமானதாக இருக்கும் நிலையில், மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே இம்மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
வயிற்றுப்போக்கிற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள்
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணம், அதன் தீவிரம், வயது மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்துவதில் உடலில் நீர்ச்சத்தைக் கொடுக்கும் கரைசல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது உடலில் இழக்கப்படும் நீர் மற்றும் தாது உப்புகளை ஈடுசெய்ய உதவுகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் லோபெரமைடு அல்லது ரேஸ்காடோட்ரில் போன்ற மருந்துகளையும் பயன்படுத்துவது குறித்து மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட பிற சிகிச்சைகள், மருத்துவ ரீதியாக அவை தேவைப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
|
மருந்தின் பெயர் |
பொதுவான பயன்பாடு |
|
துத்தநாகம் |
குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது |
|
லோபெரமைடு |
தகுந்த வயது வந்தவர்களுக்கு மலம் கழிக்கும் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது |
|
ரேஸ்காடோட்ரில் |
குடலில் திரவம் சுரப்பதைக் குறைக்க உதவுகிறது |
|
சாக்கரோமைசஸ் பவுலார்டி |
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேண உதவலாம் |
|
அசித்ரோமைசின் |
குறிப்பிட்ட வகையான பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது |
இந்தியாவில் சிறந்த வயிற்றுப்போக்கு மாத்திரைகள் மற்றும் காப்சூல்களின் பட்டியல்
வயிற்றுப்போக்கிற்குப் பொருத்தமான மருந்தைத் தேர்ந்தெடுப்பது, அது ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகளின் தீவிரம், வயது மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.
ஜீலேப் மருந்தகத்தில் கிடைக்கும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் வயிற்றுப்போக்கு மாத்திரைகள் மற்றும் காப்சூல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
லோபரஸீ 2 காப்சூல்
லோபரஸீ 2 காப்சூலில் லோபெரமைடு என்ற மருந்துப்பொருள் உள்ளது. இது குடலின் இயக்கத்தைக் குறைத்துச் செயல்படுகிறது. இதனால் சில வயது வந்தவர்களுக்கு மலம் கழிக்கும் எண்ணிக்கையைக் குறைத்து, வயிற்றுப்போக்கின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- மருந்துக் கலவை: லோபெரமைடு (2 மி.கி.)
- பயன்கள்: அடிக்கடி தளர்வான மலம் வெளியேறுவதைக் குறைத்து, மலத்தின் தன்மையைச் சீராக்க உதவுகிறது.
ரேகோட்ரில் 100 காப்சூல்
ரேகோட்ரில் 100 காப்சூலில் ரேஸ்காடோட்ரில் என்ற மருந்துப்பொருள் உள்ளது. இது குடலில் அளவுக்கு அதிகமாகத் திரவம் சுரப்பதைக் குறைக்க உதவுகிறது. திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கின்போது, நீர்த்த மலம் வெளியேறும் எண்ணிக்கையையும் அதன் தீவிரத்தையும் குறைக்க இது உதவலாம்.
- மருந்துக் கலவை: ரேஸ்காடோட்ரில் (100 மி.கி.)
- பயன்கள்: நீர்த்த மலம் வெளியேறுவதைக் குறைக்க உதவுகிறது. திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கின்போது, உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் சிகிச்சையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
என்டெரோலர் 100 மாத்திரை
என்டெரோலர் 100 மாத்திரை என்பது வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்தாகும். இதில் லாக்டோபாசில்லஸ் ஸ்போரோஜென்ஸ் உள்ளது. இது குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேண உதவுவதுடன், வயிற்றுப்போக்கின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவலாம்.
- மருந்துக் கலவை: லாக்டோபாசில்லஸ் ஸ்போரோஜென்ஸ் (10 கோடி நுண்ணுயிர் வித்துகள்)
- பயன்கள்: வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளின்போது குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேண உதவுகிறது.
பயோடிகாஸ் ப்ரீபயாட்டிக் மற்றும் புரோபயாட்டிக் காப்சூல்
பயோடிகாஸ் ப்ரீபயாட்டிக் மற்றும் புரோபயாட்டிக் காப்சூலில், குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேண உதவும் ப்ரீபயாட்டிக் மற்றும் புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் இணைந்து உள்ளன. வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானக் கோளாறுகளின்போது குடல் நலனைப் பேண இவை உதவலாம்.
- மருந்துக் கலவை: லாக்டோபாசில்லஸ் ஆசிடோபில்லஸ் (48 கோடி) + லாக்டோபாசில்லஸ் ராம்னோசஸ் (48 கோடி) + பிஃபிடோபாக்டீரியம் லாங்கம் (48 கோடி) + பிஃபிடோபாக்டீரியம் பிஃபிடம் (48 கோடி) + சாக்கரோமைசஸ் பவுலார்டி (10 கோடி) + ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் (48 கோடி) + ஃப்ரக்டோ ஒலிகோசாக்கரைடு (300 மி.கி.)
- பயன்கள்: குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் நிறைந்த ஆரோக்கியமான சூழலைப் பேண உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமானக் கோளாறுகளின்போதும் இதைப் பயன்படுத்தலாம்.
வயிற்றுப்போக்கு மருந்துகளின் பயன்கள்
வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் கடுமையான பாதிப்புகளுக்கும் வழிவகுக்கலாம். வயிற்றுப்போக்கிற்குப் பொருத்தமான மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்:
- உடலில் இழக்கப்பட்ட நீர் மற்றும் தாது உப்புகளை ஈடுசெய்ய உதவுகிறது
- அடிக்கடி தளர்வான மலம் வெளியேறுவதைக் குறைக்கிறது
- குடலில் இருந்து அளவுக்கு அதிகமாகத் திரவம் வெளியேறுவதைக் குறைக்கிறது
- உடல்நலம் விரைவில் மீள உதவுகிறது
- தகுந்த சிகிச்சை தேவைப்படும் குறிப்பிட்ட பாக்டீரியா தொற்றுகள் அல்லது அழற்சியால் ஏற்படும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது
வயிற்றுப்போக்கின்போது தவிர்க்க வேண்டியவை
வயிற்றுப்போக்கிற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன், உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், சில உணவுகள் செரிமானப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கக்கூடும்.
- எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக காரமான உணவுகள் மற்றும் எளிதில் செரிமானமாகாத கனமான உணவுகள்
- மது வகைகள்
- உங்களுக்கு வயிற்றுப்போக்கின் அறிகுறிகளை அதிகரிக்கும் உணவுகள்
- சுத்தமற்ற அல்லது முறையாகச் சுத்திகரிக்கப்படாத குடிநீர்
- மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைத் தானாக எடுத்துக்கொள்வது
- மருத்துவரின் ஆலோசனையின்றி, மலத்தில் இரத்தம் கலந்திருக்கும் போதோ அதிகக் காய்ச்சல் இருக்கும்போதோ வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை எடுத்துக்கொள்வது
மேலும், வயிற்றுப்போக்கின்போது சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
போதுமான நீர்ச்சத்தைப் பேணுவதன் மூலமும் அடிப்படை சிகிச்சைகளைப் பின்பற்றுவதன் மூலமும் வயிற்றுப்போக்கு பொதுவாகக் குறையக்கூடும். இருப்பினும், சில ஆபத்தான அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்:
- மலத்தில் இரத்தம் கலந்திருத்தல் அல்லது கருமையான மலம் வெளியேறுதல்
- கடுமையான வயிற்று வலி
- அதிகக் காய்ச்சல்
- அதிகத் தாகம், தலைச்சுற்றல் அல்லது மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல் போன்ற நீர்ச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள்
- அடிக்கடி அல்லது கடுமையாக வயிற்றுப்போக்கு ஏற்படுதல்
- நீண்ட நேரமாக வயிற்றுப்போக்கு நீடித்தல் அல்லது அடிக்கடி மீண்டும் ஏற்படுதல்
- பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் அல்லது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுதல்
முடிவுரை
வயிற்றுப்போக்கு என்பது பொதுவாக ஏற்படும் செரிமானப் பிரச்சினையாகும். இதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் பிற சிக்கல்களைத் தடுக்கவும் சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதுடன், போதுமான அளவு நீர் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதும் முக்கியம்.
வயிற்றுப்போக்கிற்கான காரணம் மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, லோபெரமைடு, ரேஸ்காடோட்ரில், சாக்கரோமைசஸ் பவுலார்டி மற்றும் குறிப்பிட்ட லாக்டோபாசில்லஸ் வகை நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்துகள் சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம்.
ஜீலேப் மருந்தகத்தில், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்துகள் மற்றும் உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசல்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.
Table of Contents
Frequently Asked Questions (FAQs)
Ans.லோபெரமைடு, ரேஸ்காடோட்ரில், நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அடங்கிய மருந்துகள் மற்றும் உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசல் ஆகியவை வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. எந்த மருந்து பொருத்தமானது என்பது வயிற்றுப்போக்கிற்கான காரணம், வயது, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.
Ans.வயிற்றுப்போக்கிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும், அடிக்கடி உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசலைக் குடிப்பது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுவது, காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை நிவாரணம் பெற உதவும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும் பொருத்தமான மருந்துகளைப் பெற மருத்துவரை அணுகவும்.
Ans.இல்லை, வயிற்றுப்போக்கிற்கான சிகிச்சையில் உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசலை மட்டும் குடிப்பது போதுமானதாக இருக்காது. இது உடலில் இழக்கப்படும் நீர் மற்றும் தாது உப்புகளை ஈடுசெய்து, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. ஆனால், வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தை இது குணப்படுத்தாது.
Ans.போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசலை அருந்துவது, வாழைப்பழம், சாதம், ஆப்பிள் கூழ் மற்றும் சிற்றுண்டி ரொட்டி போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகள் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளைத் தவிர்ப்பது போன்ற எளிய பழக்கங்கள் வயிற்றுப்போக்கிலிருந்து விரைவில் மீள உதவும்.
Ans.வயிற்றுப்போக்கின்போது சாதம், வாழைப்பழம், வறுத்த ரொட்டி, பருப்பு கலந்த சாதம், தயிர் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு போன்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள். காரமான மற்றும் அதிகக் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
Ans.வயிற்றுப்போக்கிற்கான எல்லா மருந்துகளையும் வாங்க மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு தேவையில்லை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கும் சில மருந்துகளும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உதவலாம்.
Ans.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு உடலில் நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசல் மற்றும் துத்தநாகச் சத்து கொண்ட நீர்ம மருந்து தேவைப்படலாம். மற்ற மருந்துகளை குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு மட்டுமே கொடுக்க வேண்டும்.
Ans.நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் குடல் நலத்தைப் பேணவும், சிலருக்கு வயிற்றுப்போக்கிலிருந்து விரைவில் மீளவும் உதவலாம். இருப்பினும், அவற்றின் பயன் வயிற்றுப்போக்கிற்கான காரணம் மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
Ans.உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க, நீர்ச்சத்தை மீட்டெடுக்கும் கரைசல் பொதுவாக முக்கியமானது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றுப்போக்கிற்கான எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
Ans.போதுமான நீர்ச்சத்தைப் பேணுவதுடன் தகுந்த பராமரிப்பையும் மேற்கொண்டால், திடீரென ஏற்படும் வயிற்றுப்போக்கு பொதுவாகச் சில நாட்களில் குறையக்கூடும். இருப்பினும், அது குணமாக எடுத்துக்கொள்ளும் காலம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைப் பொறுத்து மாறுபடும்.
Ans.நீர்த்த மலம் தொடர்ந்து வெளியேறினாலோ, வயிற்றுப்போக்கு கடுமையாக இருந்தாலோ, மலத்தில் இரத்தம் காணப்பட்டாலோ, அதிகக் காய்ச்சல், கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி அல்லது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பயோடிகாஸ் கேப்சூலில் உள்ள ப்ரீபயாட்டிக் மற்றும் ப்ரோபயாட்டிக், FOS உடன் சேர்ந்து குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிர்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. பயோடிகாஸ் கேப்சூலை குறைந்த விலையில் ஜீலாப் மருந்தகத்தில் ஆன்லைனில் வாங்குங்கள்.
10 Capsules In 1 Strip
என்டெரோலோர் ஸ்போர்ஸ் சஸ்பென்ஷன் என்பது தொற்றுகள், மருந்துகள், விஷப்பொருட்கள் உட்கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சிகிச்சை செய்யும் வாய்வழி ப்ரோபயாட்டிக் பானம்.
5ml In 1 Bottle
லோபராசீ 2 கேப்சூல்களில் 2 மி.கி லோபெரமைடு உள்ளது, இது வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருந்தாகும். இது வயிற்றுப்போக்கு அறிகுறிகளை திறம்பட குறைக்கிறது. சிறந்த விலையில் லோபெரமைடு 2 மாத்திரையை ஜீலாப் மருந்தகத்தில் வாங்குங்கள்.
10 Capsules In 1 Strip
ராக்கோட்ரில் 100 கேப்சூலில் ரேஸ்காடோட்ரில் 100 மி.கி உள்ளது, இது திடீர் வயிற்றுப்போக்கின் அறிகுறிகளை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படுகிறது. பயனுள்ள நிவாரணத்திற்காக ரேஸ்காடோட்ரில் 100 கேப்சூலை ஜீலாப் பார்மசியில் இருந்து வாங்குங்கள்.
10 Capsules In 1 Strip
ஜீநார்ம் சாசேவில் சாக்கரோமைசிஸ் புலார்டி உள்ளது, இது வயிற்றுப் பாதை கோளாறுகள் போன்ற வயிற்றுப்போக்கு போன்றவற்றை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இன்று ஜீலாப் மருந்தகத்தில் இருந்து வயிற்றுப்போக்கிற்கான ஜீநார்ம் சாக்கரோமைசிஸ் புலார்டி சாசே வாங்குங்கள்!
1gm powder in sachet
என்டெரோலர் மாத்திரையில் லாக்டிக் ஆசிட் பாசில்லஸ் உள்ளது, இது தொற்றால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படுகிறது. வயிற்றுப்போக்கில் இருந்து பயனுள்ள நிவாரணம் பெற Zeelab மருந்தகத்தில் இருந்து என்டெரோலர் மாத்திரையை வாங்குங்கள்.
20 Tablets In 1 strip
Recent Blogs
References
Disclaimer : Zeelab Pharmacy provides health information for knowledge only. Do not self-medicate. Always consult a qualified doctor before starting, stopping, or changing any medicine or treatment.
Related Products
Need Medicines Quick?
Share location to check quick delivery serviceability.
Change Location
Location Access Needed
Your location appears to be blocked or disabled.
Please enable the location from your browser or
device settings.
₹ 0
0
Items added
Quick Links
Categories
Our Policies
2026 Copyright By © Zeelab Pharmacy Private Limited. All Rights Reserved
Our Payment Partners
Added!
|
|



