இந்தியாவில் சிறந்த பல்வலி மருந்துகள்: பல்வலி நிவாரண மருந்துகளின் பட்டியல்
பல் வலி போன்ற பொதுவான பல் பிரச்சனைகளை உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் சந்தித்திருக்கலாம். அந்த வலி எவ்வளவு வேதனையை ஏற்படுத்தும் என்பதையும் நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள்.
பல் சொத்தை, தொற்றுகள், ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பற்களின் கூச்ச உணர்வு போன்ற பல காரணங்களால் பல் வலி ஏற்படலாம். இதனால் உணவு சாப்பிடுவதும், தூங்குவதும் கூட சிரமமாகிவிடும்.
இதுபோன்ற நேரங்களில் பல் வலியைக் குறைக்கும் மருந்துகள் மிகவும் உதவியாக இருக்கும். பல் மருத்துவரைச் சந்திக்கும் வரை வலியைக் கட்டுப்படுத்தவும், தற்காலிக நிவாரணம் பெறவும் இவை உதவுகின்றன.
பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக் மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை இந்தியாவில் பல் வலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகளாகும். இவை பொதுவான பல் பிரச்சனைகளால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
இந்தக் கட்டுரையில் பல் வலிக்கான சிறந்த மருந்துகள், பல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், இந்தியாவில் கிடைக்கும் பல் வலி நிவாரண மாத்திரைகளின் பெயர்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பல் வலி என்றால் என்ன?
பல் வலி என்பது பல்லிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதியிலோ ஏற்படும் வலியாகும். பொதுவாகப் பல்லின் நரம்புகள் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் எரிச்சல் ஏற்படுவதால் இந்த வலி உண்டாகிறது.
பல் சொத்தை, தொற்று, ஈறு பிரச்சனைகள் அல்லது பற்களில் ஏற்படும் சேதம் போன்ற காரணங்களால் லேசானது முதல் கடுமையானது வரை பல்வேறு வகையான வலிகள் ஏற்படலாம். சிலருக்கு துடிப்பது போன்ற வலியும் உண்டாகலாம்.
பல் வலியால் உணவு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, பேசுவது, தூங்குவது போன்ற அன்றாடச் செயல்கள் பாதிக்கப்படும்போது வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
பல் வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்
பல்வேறு காரணங்களால் நமக்குப் பல் வலி ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். சில காரணங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சில பிரச்சனைகளுக்கு உரிய சிகிச்சை அவசியம். வலி ஏற்படுவதற்கான காரணத்தைப் பொறுத்து வலி நிவாரண மருந்துகள் அல்லது பல் வலி நிவாரணக் களிம்பு போன்றவை தேவைப்படலாம்.
பல் வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்:
- பற்களில் சொத்தை ஏற்படுதல் அல்லது துளைகள் உண்டாதல்
- ஈறுகளில் வீக்கம் அல்லது தொற்று உள்ளிட்ட ஈறு நோய்கள்
- பற்களில் தொற்று ஏற்படுதல்
- சூடு மற்றும் குளிரால் பற்களில் கூச்சம் ஏற்படுதல்
- பற்களில் அடிபடுதல் அல்லது சேதம் ஏற்படுதல்
- அறிவுப் பற்கள் முளைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
- பற்களில் பொருத்தப்பட்ட நிரப்புப் பொருட்கள் அல்லது செயற்கை மூடிகள் தளர்வடைதல்
- மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் பிரச்சனைகள்
பல் வலியின் அறிகுறிகள்
பல் வலி ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து வேறு சில அசௌகரியங்களும் உண்டாகலாம். பல் வலியுடன் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கூர்மையான வலி, துடிக்கும் வலி அல்லது தொடர்ந்து நீடிக்கும் பல் வலி
- உணவை மெல்லும்போதும் கடிக்கும்போதும் வலி ஏற்படுதல்
- சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடும்போது பற்களில் கூச்சம் ஏற்படுதல்
- ஈறுகளில் வீக்கம் அல்லது தொடும்போது வலி ஏற்படுதல்
- தாடை அல்லது காதுப் பகுதிக்குப் பரவும் வலி
- வாயில் கெட்ட சுவை அல்லது துர்நாற்றம் ஏற்படுதல்
- பாதிக்கப்பட்ட பல்லைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
நோயாளிக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் பரிசோதித்த பிறகே, பல் மருத்துவர் பல் வலியிலிருந்து சிறந்த நிவாரணம் பெறுவதற்கான பொருத்தமான மருந்தைப் பரிந்துரைப்பார்.
பல் வலியைக் குறைக்கப் பயன்படும் பொதுவான மருந்துகளின் பெயர்கள்
பல் வலியால் ஏற்படும் அசௌகரியத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெறப் பல வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு ஏற்ற மருந்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் வயது, உடல்நல வரலாறு, ஏற்கெனவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் பல் வலிக்கான காரணம் ஆகியவற்றைப் பொறுத்தது.
இந்தியாவில் பல் வலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் சில முக்கியமான மருந்துகள்:
|
மருந்தின் பெயர் |
எவ்வாறு உதவுகிறது? |
|
பாராசிட்டமால் |
லேசானது முதல் மிதமான பல் வலி வரை குறைக்க உதவுகிறது. |
|
இப்யூபுரூஃபன் |
வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. |
|
நாப்ராக்ஸன் |
பல் வலி மற்றும் அதனால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. |
|
டைக்ளோஃபெனாக் |
வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. |
இந்தியாவில் கிடைக்கும் சிறந்த பல் வலி நிவாரண மாத்திரைகளின் பட்டியல்
ஜீலேப் மருந்தகத்தில், உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளுக்கு ஏற்பவும், நற்சான்று பெற்ற மருந்து உற்பத்தி நிலையங்களிலும் தயாரிக்கப்படும் தரமான பல் வலி நிவாரண மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதுமட்டுமின்றி, இந்தப் பல் வலி மாத்திரைகளை மிகவும் குறைந்த விலையிலும் வாங்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்தியாவில் கிடைக்கும் சில முக்கியமான பல் வலி மாத்திரைகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
|
மாத்திரையின் பெயர் |
மருந்துக் கலவை |
|
பாராசெக்ஸ் எக்ஸ்டி மாத்திரை |
பாராசிட்டமால் (650 மி.கி.) |
|
ஐபுப்ரோல் 400 மாத்திரை |
இப்யூபுரூஃபன் (400 மி.கி.) |
|
ஐபுப்ரோல் பிளஸ் மாத்திரை |
இப்யூபுரூஃபன் (400 மி.கி.) + பாராசிட்டமால் (325 மி.கி.) |
|
நாப்ரஸீ 500 வலி நிவாரண மாத்திரை |
நாப்ராக்ஸன் (500 மி.கி.) |
|
டைகாமால் 100 எஸ்ஆர் மாத்திரை |
டைக்ளோஃபெனாக் (100 மி.கி. நீடித்துச் செயல்படும் வகை) |
பாராசெக்ஸ் எக்ஸ்டி மாத்திரை
பாராசெக்ஸ் எக்ஸ்டி மாத்திரையைப் பல் வலியைக் குறைக்கப் பயன்படுத்தலாம். இதில் 650 மி.கி. பாராசிட்டமால் உள்ளது. இது மூளையில் செயல்பட்டு வலி உணர்வுகளை ஏற்படுத்தும் தகவல்களைத் தடுத்து, லேசானது முதல் மிதமான பல் வலி வரை குறைக்க உதவுகிறது.
- மருந்துக் கலவை: பாராசிட்டமால் (650 மி.கி.)
- பயன்கள்: லேசானது முதல் மிதமான பல் வலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஐபுப்ரோல் 400 மாத்திரை
ஐபுப்ரோல் 400 அல்லது 400 மி.கி. இப்யூபுரூஃபன் மாத்திரை பல் வலியைக் குறைக்கப் பயன்படும் முக்கியமான வலி நிவாரண மருந்தாகும். இது வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களின் செயல்பாட்டைக் குறைப்பதன் மூலம் பல் பிரச்சனைகளால் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- மருந்துக் கலவை: இப்யூபுரூஃபன் (400 மி.கி.)
- பயன்கள்: பல் வலியைக் குறைக்கவும், அதனுடன் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஐபுப்ரோல் பிளஸ் மாத்திரை
ஐபுப்ரோல் பிளஸ் என்பது பல் வலி மற்றும் பல் தொடர்பான வலிகளைக் குறைக்க உதவும் இரு மருந்துகள் இணைந்த மாத்திரையாகும். இதில் இப்யூபுரூஃபன் மற்றும் பாராசிட்டமால் ஆகியவை உள்ளன. இவை வெவ்வேறு முறைகளில் செயல்பட்டு, பல் பிரச்சனைகளால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
- மருந்துக் கலவை: இப்யூபுரூஃபன் (400 மி.கி.) + பாராசிட்டமால் (325 மி.கி.)
- பயன்கள்: பல் வலி மற்றும் அதனுடன் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
நாப்ரஸீ 500 வலி நிவாரண மாத்திரை
நாப்ரஸீ 500 என்பது 500 மி.கி. நாப்ராக்ஸன் கொண்ட பல் வலி நிவாரண மாத்திரையாகும். இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்து வகையைச் சேர்ந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி சரியான முறையில் எடுத்துக்கொள்ளும்போது, வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களின் உற்பத்தியைக் குறைத்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
- மருந்துக் கலவை: நாப்ராக்ஸன் (500 மி.கி.)
- பயன்கள்: பல் வலி மற்றும் அதனுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
டைகாமால் 100 எஸ்ஆர் மாத்திரை
டைகாமால் 100 எஸ்ஆர் மாத்திரை பல் வலியைக் குறைக்கப் பயன்படும் மாத்திரைகளில் ஒன்றாகும். இதில் 100 மி.கி. டைக்ளோஃபெனாக் சோடியம் நீடித்துச் செயல்படும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்து வகையைச் சேர்ந்தது. பற்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- மருந்துக் கலவை: டைக்ளோஃபெனாக் (100 மி.கி., நீடித்துச் செயல்படும் வகை)
- பயன்கள்: மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக்கொள்ளும்போது பல் வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பல் வலி மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்
பல் வலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொண்டால் பொதுவாகப் பாதுகாப்பானவை. இருப்பினும், ஒவ்வொருவரின் உடலும் மருந்துகளுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றலாம். இதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவை பின்வருமாறு:
- வயிற்று வலி, வயிற்று அமிலத்தன்மை அல்லது செரிமானக் கோளாறு
- குமட்டல் அல்லது வாந்தி
- தலைச்சுற்றல் அல்லது தலைவலி
- சில வலி நிவாரண மாத்திரைகளால் வயிற்றுப் புண் அல்லது இரத்தக்கசிவு ஏற்படுதல்
- அளவுக்கு அதிகமாகப் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுதல்
- சில வலி நிவாரண மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதால் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்படுதல்
பல் வலி இருக்கும்போது எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
பல் வலியிலிருந்து விரைவான நிவாரணம் பெற வலி நிவாரண மாத்திரைகள் உதவலாம். இருப்பினும், பல் வலியை மேலும் அதிகரிக்கக்கூடிய சில பழக்கங்களையும் தவிர்ப்பது அவசியம்.
- ஆஸ்பிரின் மாத்திரையை நேரடியாகப் பல்லின் மீதோ ஈறுகளின் மீதோ வைக்காதீர்கள். இது வாயின் மென்மையான திசுக்களில் எரிச்சல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
- குறிப்பாக நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- மருத்துவர் பரிந்துரைத்த பல் வலி நிவாரண மாத்திரைகளின் அளவு மற்றும் எடுத்துக்கொள்ளும் முறையைப் பின்பற்றுங்கள்.
- மிகவும் சூடான, குளிர்ச்சியான அல்லது அதிக இனிப்புள்ள உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இவை பற்களில் கூச்ச உணர்வையும் வலியையும் அதிகரிக்கலாம்.
- நீண்ட நேரமாகத் தொடர்ந்து இருக்கும் பல் வலியை அலட்சியப்படுத்தாதீர்கள்.
- வாயின் மென்மையான திசுக்களில் எரிச்சல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளைத் தவிர்க்கவும்.
பல் வலிக்கு எப்போது பல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?
பல் வலி நிவாரண மருந்துகள் வலியிலிருந்து தற்காலிகமாக நிவாரணம் அளிக்கலாம். ஆனால், வலி ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணத்தைக் குணப்படுத்த சில நேரங்களில் பல் மருத்துவரின் சிகிச்சை அவசியமாகிறது. கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் கவனம் செலுத்த வேண்டும்:
- பல்லில் கடுமையான தொற்று அல்லது சீழ்க்கட்டி ஏற்படுதல்
- பல் சொத்தை பல்லின் உள் அடுக்குகள் வரை பரவுதல்
- முகம் அல்லது தாடைப் பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
- தொடர்ந்து நீடிக்கும் அல்லது நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி
- பல்லில் விரிசல் ஏற்படுதல், உடைதல் அல்லது சேதமடைதல்
- ஈறுகளில் தொற்று ஏற்பட்டு இரத்தம் அல்லது சீழ் வெளியேறுதல்
- காய்ச்சலுடன் பல் வலியும் ஏற்படுதல்
- அறிவுப் பல் முளைப்பதால் வலி ஏற்படுதல்
பல் வலி நிவாரண மாத்திரைகள் பல் தொற்றைக் குணப்படுத்தாமல் இருக்கலாம். பல் தொற்றுக்கான சிகிச்சைக்கு இந்த பல் தொற்றுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
முடிவுரை
உங்களுக்குப் பல் வலி ஏற்பட்டால், அதற்கேற்ற சரியான மருந்து வலியிலிருந்து நல்ல நிவாரணம் அளிக்க உதவும். சிறந்த பலனைப் பெற பல் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தின் அளவு மற்றும் எடுத்துக்கொள்ளும் முறையைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
ஜீலேப் மருந்தகத்தில் தரமான மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் பல் வலி நிவாரண மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரத்தில், பல் வலிக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும், பற்கள் மற்றும் வாயைச் சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.
பல் வலியிலிருந்து விரைவாகவும் நம்பகமாகவும் நிவாரணம் பெற, சரியான மருந்தைத் தேர்ந்தெடுத்து, மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தி, வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க இது நிச்சயம் உதவும்!
Table of Contents
Frequently Asked Questions (FAQs)
Ans.பாராசிட்டமால், இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக் மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை இந்தியாவில் பல் வலியைக் குறைக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகளாகும். உங்களுடைய உடல்நிலை, வலியின் தீவிரம் மற்றும் மருத்துவரின் ஆலோசனை ஆகியவற்றைப் பொறுத்தே சரியான மருந்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Ans.ஐபுப்ரோல் 400 மாத்திரை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் பல் வலியிலிருந்து விரைவாக நிவாரணம் பெற உதவுகிறது.
Ans.ஆம், பாராசிட்டமால் லேசானது முதல் மிதமான பல் வலையைக் குறைக்க உதவும். பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வலி தொடர்ந்து நீடித்தால் பல் மருத்துவரைச் சந்திக்கவும்.
Ans.ஆம், இப்யூபுரூஃபன் பல் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும், வயிற்றுப் புண், சிறுநீரகப் பிரச்சனைகள், சில இதய நோய்கள் அல்லது குறிப்பிட்ட வகையான ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த மருந்து ஏற்றதாக இருக்காது.
Ans.தற்காலிகமாகப் பல் வலியைக் குறைக்க, உங்களுக்குப் பொருத்தமான வலி நிவாரண மாத்திரையைப் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கலாம். கன்னத்தின் வெளிப்புறத்தில் குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம். வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற பல் மருத்துவரைச் சந்திக்கவும்.
Ans.இல்லை, எல்லா வகையான பல் வலிகளுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை. பொதுவாக, பாக்டீரியாக்களால் ஏற்படும் பல் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பல நேரங்களில் பல் மருத்துவரின் நேரடிச் சிகிச்சையும் அவசியமாகும்.
Ans.மெஃபெனாமிக் அமிலம் பல் வலியைக் குறைக்க உதவலாம். ஆனால், இது வயிற்றில் எரிச்சல் மற்றும் பிற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
Ans.கர்ப்ப காலத்தில் சில பல் வலி நிவாரண மருந்துகள் ஏற்றதாக இருக்காது. எந்தவொரு வலி நிவாரண மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக, மருத்துவர் அறிவுறுத்தாமல் இப்யூபுரூஃபன், டைக்ளோஃபெனாக் அல்லது நாப்ராக்ஸன் போன்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
Ans.பல் வலிக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் குமட்டல், செரிமானக் கோளாறு, வயிற்று வலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படலாம். சில மருந்துகளைத் தவறான முறையில் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, வயிற்றில் இரத்தக்கசிவு அல்லது கல்லீரல் பாதிப்பும் ஏற்படலாம்.
Ans.மருத்துவரின் ஆலோசனையின்றிப் பல் வலி நிவாரண மாத்திரைகளைத் தினமும் எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. இவற்றை நீண்ட காலம் பயன்படுத்துவது பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிப்பதுடன், பல் வலிக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதையும் தாமதப்படுத்தலாம்.
Ans.இல்லை, வலி நிவாரண மாத்திரைகள் தற்காலிகமாக வலியைக் குறைக்க மட்டுமே உதவும். பல் சொத்தை அல்லது பல்லில் சீழ்க்கட்டி போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தாது. பல் வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்கப் பல் மருத்துவரால் மட்டுமே முடியும்.
Ans.பற்களில் ஏற்படும் லேசான கூச்ச உணர்வு சில நேரங்களில் தானாகவே குறையலாம். ஆனால், பல் சொத்தை, பற்களில் விரிசல் அல்லது தொற்று காரணமாக ஏற்படும் வலிக்கு பொதுவாகப் பல் மருத்துவரின் பரிசோதனையும் சிகிச்சையும் தேவைப்படும். தொடர்ந்து ஏற்படும் அல்லது மீண்டும் மீண்டும் வரும் பல் வலியை அலட்சியப்படுத்தக் கூடாது.
Ans.பல் வலி ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், அதிகரித்தால் அல்லது அடிக்கடி மீண்டும் ஏற்பட்டால் பல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காய்ச்சல், முக வீக்கம் அல்லது சீழ் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். மூச்சு விடுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் அவசர மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
பாராசெக்ஸ் எக்ஸ்டி மாத்திரையில் பாராசிட்டமால் 650 மி.கி உள்ளது. இது வலியை குறைத்து காய்ச்சலை தணிக்க உதவுகிறது. பயனுள்ள வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்திற்காக Zeelab மருந்தகத்தில் இருந்து பாராசிட்டமால் 650 மாத்திரையை வாங்குங்கள்.
10 Tablets In 1 Strip
இபுப்ரோல் ப்ளஸ் மாத்திரை (இபுபுரோஃபென் 400 மி.கி + பாராசிட்டமால் 325 மி.கி): விலை, பயன்பாடுகள், பக்க விளைவுகள், அளவு. வலி, காய்ச்சல் மற்றும் அழற்சியை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
10 Tablets In 1 Strip
நாப்ரோஸீ-500 மாத்திரை ஒரு வலி நிவாரண மருந்தாகும். நாப்ரோஸீ-500 மாத்திரை மூட்டுகள் மற்றும் தசைகளை பாதிக்கும் நிலைகளில் ஏற்படும் வலி, அழற்சி மற்றும் வீக்கத்தை குறுகிய காலத்திற்கு நிவர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. நாப்ரோஸீ-500 மாத்திரையை பல எளிய கட்டண முறைகளில் ஆர்டர் செய்து 90% வரை தள்ளுபடி பெறுங்கள்.
10 Tablets In 1 Strip
டிகமோல் 100 எஸ்ஆர் மாத்திரையில் டைக்ளோஃபெனாக் சோடியம் (100 மி.கி) உள்ளது. இது பயனுள்ள வலி நிவாரணத்தை வழங்குகிறது. டிகமோல் 100 எஸ்ஆர் மாத்திரையை சிறந்த விலையில் ஜீலாப் மருந்தகத்தில் வாங்குங்கள்.
10 Tablets In 1 Strip
இபுப்ரோல் 400 மாத்திரை (இபுபுரோபேன் 400மி.கி.) வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இபுப்ரோல் 400 மாத்திரையை Zeelab மருந்தகத்தில் வாங்குங்கள்.
10 Tablets In 1 Strip
Recent Blogs
References
Disclaimer : Zeelab Pharmacy provides health information for knowledge only. Do not self-medicate. Always consult a qualified doctor before starting, stopping, or changing any medicine or treatment.
Related Products
Need Medicines Quick?
Share location to check quick delivery serviceability.
Change Location
Location Access Needed
Your location appears to be blocked or disabled.
Please enable the location from your browser or
device settings.
₹ 0
0
Items added
Quick Links
Categories
Our Policies
2026 Copyright By © Zeelab Pharmacy Private Limited. All Rights Reserved
Our Payment Partners
Added!
|
|




